யோகாச்சங்கம் உங்களை வரவேற்கின்றது

     

 

123456789

10

 

யோகாசனத்தின் போது அவதானிக்கவேண்டிய முக்கிய விடயங்கள்.

► யோகாசனம் செய்வதற்கு அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுப்பது நன்று. நேரம் இல்லாவிடின் இரவு உணவு உட்கொள்வதற்கு  ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர்   செய்யலாம்.

►காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்த பின்னர் செய்தல் நன்று.

►யோகாசனம் செய்ய முன்னரோ அல்லது செய்த பின்னரோ குளிப்பது நல்லதல்ல.

►ஆசனம் செய்வதற்கு முன்பு வயிற்றில் ஆகாரம் ஏதுமின்றி வெறும் வயிற்றில் இருத்தல் நல்லது.

►உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது யோகாசனம் செய்வதை தவிர்த்தல் நல்லது.

►திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். பூந்தோட்டம் அருகில் இருந்தால் நல்லது.

►இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யக் கூடாது.

►யோகாசனம் அறிந்த பயிற்சியாளர் மூலம் ஆசனம் பயில்வது நல்லது.

►யோகாசனத்தின் போது மனதை ஒரு நிலைப்படுத்தி ஆழ்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

►உணவில் மிகுந்த கட்டுப்பாடக இருக்க வேண்டும்.

►யோகாசனத்தை மிக மெதுவாக வியர்வை பூக்காத வண்னம் செய்வது  நன்று.

►இருதய நோயுள்ளவர்கள் யோகாசனம் செய்யக்கூடாது.

►இரவில் தூங்காது கண்விழித்தவர்கள் மறுநாள் பயிற்சி செய்யக்கூடாது.

►பெண்கள் மாதவிலக்கு மற்றும் கர்ப்பகால நேரங்களில் ஆசனம் செய்யக் கூடாது.

       யோகாச்சங்கம்

          நன்றி.

 

 

 

Posted in yoga-midt | Comments Off on யோகாச்சங்கம் உங்களை வரவேற்கின்றது